
மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகின் நாயகன் ‘நினைவில் வாழும்’ ஆதி குமணனின் வாழ்க்கைத் துணைவியார் திருமதி இந்திராவதி காலமானார்.
அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு வாரமாக சுய நினைவு இல்லாமல் இருந்த அவர், இன்று ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி அளவில் நினைவு திரும்பாமலேயே காலமானார்.
1970 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பத்திரிகை உலகில் இணைந்த ஆதி குமணன், ‘தமிழ் ஓசை’ நாளிதழை நடத்தி வந்தார்.

அந்த காலக்கட்டம் அவர்தம் பத்திரிகைப் பயணத்தில் போராட்ட காலம்.
ஏறக்குறைய அந்த நேரத்தில் ஆதி குமணனின் வாழ்வில் வசந்த வாசலாக வந்து இணைந்தவர் திருமதி இந்திராவதி. அன்னாரின் மறைவுக்கு குமரி இரங்கல் தெரிவிக்கிறாள்.


